மதுரை அழகர்கோவிலில் இருந்து நேற்று வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (ஆக.11) நடைபெறும் ஆடிப்பூரம் திருத்தேர் விழாவுக்கு கள்ளழகர் சூடிக்களைந்த வஸ்திரம் புறப்பட்டது.
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்தன்று திருத்தேர் விழா ஆண்டாள் பவனியாக நடைபெறுகிறது. இதற்கு அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் உடுத்தி களைந்த வஸ்திரத்தை ஆண்டாள் உடுத்தி திருத்தேரில் பவனி வருவது வழக்கம். அதற்காக நேற்று (ஆக.10) பிற்பகல் அழகர்கோவிலிலிருந்து வஸ்திரம், பூமாலைகள், பழ வகைகள், துளசி மாலை, தோசை மற்றும் உலர் பழ வகைகள், பட்சணங்கள் உள்ளிட்டவை வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நோக்கி புறப்பட்டது.
இதில் உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் கோயில் பணியாளர்கள், பட்டர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago