கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ல் நடைபெறவிருக்கும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்பர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத் துறையினர் பசும்பொன் கிராம மக்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி வட்டார மருத்துவ அலுவலர் ச.அசோக் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. சாவித்திரி, கே.ரவி (கிராம ஊராட்சிகள்) ஆகியோரது தலைமையில் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள் ஆதில்ஷேக், சுகதேவ் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago