காப்பக குழந்தைகள் விற்பனை விவகாரம் - மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை :

By செய்திப்பிரிவு

மதுரையில் காப்பகக் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.

மதுரை ஆயுதப்படை மைதா னம் அருகே சிவக்குமார் என் பவர் ‘இதயம் டிரஸ்ட் ’ என்ற பெயரில் ஆதரவற்றோருக்கான காப்பகம் ஒன்றை நடத்தினார். இங்கு முதியோர்கள் மற்றும் சாலையோரங்களில் ஆதரவின்றி திரியும் தாயுடன் உள்ள குழந் தைகளும் தங்க வைக்கப் பட்டனர்.

இந்நிலையில் அக் காப்பகத்தில் தங்கியிருந்த ஆண் குழந்தை ஒன்று மதுரை முனிச்சாலை பகுதி யைச் சேர்ந்த குழந்தை இல்லா தம்பதிக்கு விற்கப்பட்டது. ஆனால், அக்குழந்தை கரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டதாக காப்பக நிர்வாகி மற்றும் ஊழியர்கள் நாட கமாடியது தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில் மேலும், ஒரு பெண் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக காப்பக நிர்வாகி சிவக்குமார், ஊழியர்கள், தரகர்கள், குழந்தையை வாங்கிய தம்பதிகள் என 9 பேரை தல்லாகுளம் போலீ ஸார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்தது.

மதுரை அழகர்கோவில் சாலை சுற்றுலா மாளிகையில் நேற்று மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி சுந்தரேசன் விசாரணை நடத்தினார். சமூக நலத்துறை அலுவலர் கெலன்மேரி, நகர்புற மருத்துவ அலுவலர் லேகா ஜோதி, வடக்கு மண்டல மருத்துவ அலுவலர் கோதை மற்றும் மேலூர் பகுதி சமூக ஆர்வலர் அசாரூதின் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், வழக்கறிஞர் முத் துக்குமார் ஆகியோர் நேரில் ஆஜ ராகி விளக்கம் அளித்தனர்.

இந்தப் பிரச்சினையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமார் உள்ளிட்ட 9 பேரிடமும் இன்று விசாரணை நடத்தப்படும் என ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்