மதுரை மாவட்டம் குலமங்களம் பகுதியில் 2 ஆண்டுகளாக நீடிக்கும் மின்னழுத்த குறைபாடு பிரச்சினையை போக்க புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் குலமங்களம் ஊராட்சியில் பாண்டியன் நகர் வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுடன் புதிதாக வீடுகள் கட்டுமானப் பணியும் நடந்து வருகின்றன. பெருகும் குடியிருப்புகளின் பயன்பாட்டுக்கேற்ற டிரான்ஸ்பார்மர் வசதி இல்லை.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மின்னழுத்த குறைபாடு பிரச்சினையால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. இதுகுறித்து சிக்கந்தர் சாவடி துணை மின் நிலைய அதிகாரிகளிடம் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தர கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் குலமங்களம் பகுதியில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்னழுத்த குறைபாடு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago