விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை உழுதபோது கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள், தேவி, பூதேவி கற்சிலைகள், விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்ப டைக்கப்பட்டன.
திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கிழவன். இவர் 50 ஆண்டுகளுக்குப் பின்பு, விவசாயப் பணிக் காக தனது நிலத்தை நேற்று முன்தினம் உழு தார். அப்போது சுமார் 2 அடி உயரமுள்ள பெருமாள், தேவி, பூதேவி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மிகவும் நுட்பமாகக் கல்லில் செதுக்கப்பட்டிருந்த இச்சிலைகள் 13-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருச்சுழி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் சிலை களை மீட்கச் சென்றபோது பொதுமக்கள் தடுத்து வாக்கு வாதம் செய்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை மீட்டனர். இச்சிலைகள் விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் மாலை ஒப்படைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago