விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழராஜபுரம் பகுதியில் ரேஷன் கடையை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொருள்கள் வாங்கி வருகின்றனர். இருப்பினும் இந்த கடையில் உள்ள விற்பனையாளர் இரண்டு கடைகளை சேர்ந்து பார்ப்பதால் சரியாக வருவதில்லை என்றும், அப்படி வந்தாலும் கை ரேகை இயந்திரம் பழுதால் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.
மேலும், ரேசன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் 20 கிலோ அரிசி வாங்கினால் 15 கிலோ அரிசி மட்டுமே இருப்பதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடன் இணைந்து அப்பகுதி பொதுமக்கள் ரேசன் கடையை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோட்டைராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago