விருதுநகரில் நடந்த சிறப்பு முகாமில் காணாமல் போன ஒரு பெண் உட்பட 3 பேர் கண்டுபிடிக்கப் பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக் கப்பட்டனர்..
விருதுநகர் மாவட்டத்தில் 2010 முதல் 2021 வரை விருதுநகர் காவல் உட்கோட்டத்தில் 17 ஆண்கள், 9 பெண்கள், 2 சிறுவர்கள் என 28 பேர் காணாமல் போய் உள்ளனர். சிவகாசி காவல் உட்கோட்டத்தில் 12 ஆண்கள், 9 பெண்கள், 4 சிறுவர்கள், அருப்புக்கோட்டை காவல் உட்கோட்டத்தில் 7 ஆண்கள், 6 பெண்கள், ராஜபாளையம் உட்கோட்டத்தில் 15 ஆண்கள், 9 பெண்கள், 2 சிறுவர்கள் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் காவல் உட்கோட் டத்தில் 23 பேர், வில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்தில் 24 பேர், திருச்சுழி காவல் உட்கோட்டத்தில் 15 பேர் என விருதுநகர் மவாட் டத்தில் 85 ஆண்கள், 55 பெண்கள், 9 சிறுமிகள், 3 சிறுவர்கள் என மொத்தம் 154 பேர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களைக் கண்டறிவதற்கான சிறப்பு விசாரணை முகாம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டங்களிலும் அந்தந்த டிஎஸ்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, ரயில், சாலை விபத்துகளில் உயிரிழந்து அடையாளம் காணாமல் உள்ள சடலங்களை வைத்தும், தெருக்களில் சுற்றித்திருந்தோர் குறித்த விவரங்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணை செய்யப்பட்டது.
விருதுநகர் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த சிறப்பு விசாரணை முகாம் விருதுநகர் எஸ்.எஸ்.கே.மண்டபத்தில் நடந்தது. டிஎஸ்பி அருணாசலம் தலைமை வகித்தார். முகாமை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில், விசாரணை நடத்தி காணாமல் போன ஒரு பெண் உட்பட 3 பேர் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக் கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago