திண்டுக்கல்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையை ஒட்டிய மரங்களை அப்புறப் படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கம்புணரியில் தொடர்பில்லாத பழமையான மரங்களையும் வெட்டினர்.
நேற்று கிருங்காக்கோட்டை விலக்கு அருகே பழமையான 3 மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணை அமைப்பாளர் பூரண சங்கீதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், வெட்டிய மரங்களை எடுத்துச் செல்லவும் எதிர்ப்புத் தெரிவித்தார். தொடர்ந்து போலீஸாரிடமும், வருவாய்த் துறையினரிடமும் புகார் தெரிவித்தார். இது குறித்து பூரணசங்கீதா கூறுகையில், ‘சாலை விரிவாக்கத்துக்கு சம்பந்தமில்லாத மரங்களை வெட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்,’ என்றார்.
வட்டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘சாலைப் பணிக்குத் தொடர்பில்லாத மரங்களை வெட்ட அனுமதியில்லை. விசாரித்து நட வடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago