மதுரை மாவட்டம் கீழபதினெட்டாங் குடியைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் ராஜாவுக்கு மேலூரில் அலுவலகம் உள்ளது. கடந்த 7-ம் தேதி இந்த அலுவலகத்துக்கு முன்பாக மேலூர் நாகப்பன்பட்டியைச் சேர்ந்த ரவுடியான ரகுநாதன் என்பவர் தனது காரை நிறுத்தினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரகுநாதன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து தாக்கியதில் ராஜா உயிரிழந்தார். ரகுநாதன் உட்பட 5 பேரை மேலூர் போலீஸார் தேடிய நிலையில், நேற்று ரகுநாதன் (32), வெள்ளாளபட்டி விக்னேஷ் (25), மேலூர் சின்னத்தம்பி மகன் விக்னேஷ் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago