ஈரோட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஈரோட்டில் கடந்த மாதம் கரோனா தொற்று குறைந்ததால், கரோனா பரிசோதனை செய்யப்படு வோரின் எண்ணிக்கையும் குறைந்தது. கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக ஈரோட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 188 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கரோனா தொற்றினைக் கண்டறியும் பரிசோதனையும் தீவிரமாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 6.80 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஈரோடு வரும் ரயில் பயணிகளுக்கு, ரயில் நிலையத்தில் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்ச்சல் கண்டறியப்பட்டால், அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கட்டுப்பாடுகளை மீறி மாலை 5 மணிக்கு மேல் திறந்திருந்த 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago