அரியலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் தலைமை வகித்து பேசியது:
ஓட்டக்கோவில் அருகேயுள்ள தனியார் சிமென்ட் ஆலை, அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல், அதிகமான புகைமாசுவை வெளியிட்டு வருகிறது. இதனால் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஆலைக்கு வரும் லாரிகளால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.
எனவே ஆலை நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆலையை கண்டித்தும், ஆலையை மூடவும் தீர்மானம் இயற்றப்படும் என்றார். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆத ரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து, கவுன்சிலர் அன்பழகன் பேசும்போது, ‘‘ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஊராட்சி செயலர் கபிலன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago