குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி - வண்ணார்பேட்டையில் பெண்கள் மறியல் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் கடந்த 6 மாதமாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெரு, தொண்டர் தெரு, சிந்தாமணி தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அருகிலுள்ள தெருக்களுக்கு சென்று ஒரு குடம் தண்ணீருக்கு ரூ.1 கட்டணம் கொடுத்து பெண்கள் தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் கள் காலி குடங்களுடன் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்துமகா சபை மாநில துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, வண்ணார்பேட்டையில் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டும் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. குடியிருப்புகளுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிதுநேரத்துக்குப்பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்