நெல்லையப்பர் கோயிலில் முளைக்கட்டு வைபவம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைக்கட்டு வைபவம் நேற்று மாலையில் பக்தர்கள் பங்கேற் பின்றி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் 4-ம் நாளான கடந்த 4-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடை பெற்றது. இரவு 8 மணிக்கு காந்தி மதி அம்மன் உள்பிரகார உலா நடைபெற்றது. கோயிலின் ஆடிப்பூர திருவிழாவின் 10-ம் நாளான நேற்று மாலையில் திருக்கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் முளைக்கட்டு திருநாள் வைபவம் நடைபெற்றது. முளைக்கட்டு திருவிழாவில் அம்பாள் மடியில் முளை கட்டிய பயிரை கட்டி வைத்து பிரசாத மாக வழங்கப்பட்டது. பின்னர் நெல்லை யப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வழி பாட்டுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 9, 10-ம் தேதிகளிலும் பக்தர்கள் அனுமதிக் கப்படவில்லை. முளைக் கட்டு திருநாள் வைபவமும் பக்தர் கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்