தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், போகநல்லூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் 121 குடும்பங்களைச் சேர்நத 378 பேர் வசித்து வருகின்றனர். இதேபோல், சங்கரன்கோவில் வட்டம் களப்பாகுளம் ஊராட்சி ஆத்தியடி விநாயகர் கோயில் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 136 பேர் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களில் தமிழ்நாடு அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை (இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை) இயக்குநர் மற்றும் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, முகாம்களில் வசிப்போர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு மராமத்து, 100 நாள் வேலைவாய்ப்பு, முதியோர், விதவைப் பெண்களுக்கு உதவித்தொகை, பெண் குழந்தைகள் திருமணத்துக்கு உதவித் தொகை, ரேஷன் கடை, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், தெருவிளக்கு, சாலை வசதி, பேருந்து போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முகாம்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.
ஆய்வின்போது இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் ரமேஷ், கோட்டாட்சியர்கள் ராமசந்திரன், ஹஷ்ரத் பேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago