நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகருக்கு உட்பட்ட சாலைகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் நெடுஞ்சாலை களிலும், மாநகராட்சி சாலைகளிலும் அனுமதியின்றி ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இந்த விளம்பரப் பலகைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி க்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து ஒருவாரத்துக்குள் இந்த விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருந்தார்.

மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். அந்தந்த மண்டல உதவி ஆணையர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார். நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இப்பணிகளில் ஈடுபட்டனர்.

அகற்றப்பட்ட விளம்பரப் பலகைகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் லாரிகளில் அள்ளி எடுத்துச் செல்லப்பட்டு ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டன..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்