திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, அம்பலூர் பாலாறு, காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலை யத்தின் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பரவலான மழை பதிவானது. ஒரு சில இடங்களில் நேற்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி காலை 7 மணி வரையும் கன மழை பதிவானது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 8.2, ஆற்காட்டில் 19.2, காவேரிப்பாக்கத்தில் 25, சோளிங்கரில் 7, வாலாஜாவில் 37.2, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 57, ஆம்பூரில் அதிகபட்ச அளவாக 101.5, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 61.8, நாட்றாம் பள்ளியில் 62.4, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 88, வாணியம்பாடியில் 86, திருப்பத்தூர் நகரில் 11.5 மி.மீ மழையும், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 18.4, காட்பாடியில் 15.4, மேல் ஆலத்தூரில் 49.8, பொன்னையில் 25.2, வேலூரில் 3, அம்முண்டி வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 7.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளன.
ரயில்கள் தாமதம்
கன மழையால் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தின் 3,4-வது நடைமேடை பகுதியில் உள்ள தண்டவாளம் முழுவதும் மழை நீர் தேங்கி ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வரை செல்லும் ஏலகிரி விரைவு ரயில், நேற்று காலை 5 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 6 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அதேபோல், பெங்களூரு ஹத்தியா விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.ஜோலார்பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து சேலம் மற்றும் பெங்களூருவுக்கு வந்து செல்லும் ரயில்கள் 1,2 மற்றும் 5-வது நடை மேடை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரயில்கள் சென்றன.
ஏலகிரி மலையில் மண் சரிவு
ஏலகிரி மலைப் பாதையில் 3, 8-வது வளைவுகளில் கன மழை காரணமாக பாறைகள் உருண்டு மண் சரிவு ஏற்பட்டு பேருந்து போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. இந்த தகவலை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல், சுற்றுலாத்தலமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல், வாணியம் பாடி மேட்டுப்பாளையம் பாலாற்று பாலத்தை வெள்ள நீர் கடந்து சென்றது.
பொதுமக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி மேட்டுப் பாளையம் பகுதியில் அதிகாலை பெய்த கனமழையால் ஜாப்ராபாத் பாலாற்று பகுதிக்குச் செல்லும் கழிவுநீருடன் மழைநீரும் வீடுகளுக்குள் புகுந்தது. அதை அகற்ற உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளிப் பட்டு சாலை சந்திப்பில் சுமார் 1 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டாற்று வெள்ளம்
மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளக்கல் காட் டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. அங்குள்ள விண்ண மங்கலம் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொதுக் கிணறு முழுவதும் வெள்ள நீரால் நிரம்பியதுடன் அருகில் உள்ள தென்னந்தோப்புகள் வழியாகவும், நெல், கரும்பு பயிரிட்டிருந்த விவ சாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது.
தோல் கழிவுநீர் கலப்பு
ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றுப் பகுதியில் வெள்ளப் பெருக்கு இல்லாத நிலையில், கழிவுநீர் மட்டும் நுரை பொங்கும் அளவுக்கு வந்தது. மழை வெள்ளத்தை நம்பி அங்குள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை பாலாற்றில் திருப்பி விட்டதாக புகார் எழுந்தது. இந்த தகவலை அடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவுநீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago