சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மூன்று நாட்களில் முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், திருச்சி பிரதான சாலையில் 1,100 மீட்டர் நீளத்துக்குப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1,090 மீட்டர் நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், தாதகாப்பட்டி சஞ்ஜீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே நடைபெறும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் அப்பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாதகாப்பட்டியில் நடைபெறும் பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
“பணிகளை இன்னும் 3 தினங்களுக்குள் முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும்” என அலுவலர்களிடம், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago