கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலத்தில் கடந்த ஆண்டைப்போல இந்தாண்டும் ஆடிப்பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உட்பட எட்டுபேட்டை மாரியம்மன் கோயில்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதல் தொடங்கியதும், அனைத்து கோயில்களிலும் பூச்சாட்டுதலுடன் அடுத்தடுத்து கம்பம் நடுதல், பொங்கல் விழா, பக்தர்கள் உருளுதண்டம் போடுதல், அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல், சத்தாபரணம், மஞ்சள் நீராட்டுதல் என 22 நாட்கள் ஆடிப்பண்டிகை கோலாகலமாக நடத்தப்படும்.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்தாண்டைப்போல இந்தாண்டும் மாரியம்மன் கோயில்களில் ஆடிப்பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் அரசு பொருட்காட்சியும் நடைபெறவில்லை. இதனால், சிறு வியாபார கடைகள், உணவுக் கடைகள் உள்ளிட்ட வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago