தமிழகம் முழுவதும் உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் தரமானதாக விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதன் அவசியம் குறித்து மளிகை கடை, பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலையோர கடைகளின் வியாபாரிகள், உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு தொடர்ச்சியாக தரமான உணவு சமைப்பதன் அவசியம் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக, மளிகை கடை, பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிபவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை எவ்வாறு பேக்கிங் செய்ய வேண்டும், பொருட்களின் மீது காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் எப்படி ஒட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்து, பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.
சென்னையில் அடுத்த வாரம் இப்பயிற்சி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago