பப்ஜி மதன் வழக்கு - சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு :

By செய்திப்பிரிவு

யூ டியூப் சேனல்களில் பப்ஜி விளையாட்டுகளின் மூலமாக பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட பப்ஜி மதன், கடந்த ஜூலை 5-ம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசும் சென்னை மாநகர காவல் ஆணையரும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்