சென்னை ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்
பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும், 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒருவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர். ஆனால், தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை ராயபுரம் சூரியநாராயணன் சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவகத்தில் 15 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago