விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துஅனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் மோகன் கூறியது:
விழுப்புரம் நகராட்சியை பொறுத்தவரையில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 32,123 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. 45 வயதுக்குமேற்பட்ட 38,385 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 16,069 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட 11,360 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தனி கவனம் செலுத்தி கரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேலும் சிறப்பான முறையில் பணியாற்றி கரோனா தொற்றை பூஜ்ஜியமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago