வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி : அனைத்துக் கட்சிகள் மனிதச் சங்கிலி :

By செய்திப்பிரிவு

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 9-ம் தேதியையொட்டி புதுவையில் அனைத்துக் கட்சி சார்பில் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், காங்கிரஸ் கட்சியின் செல்வகணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீதநாதன், திமுக செல்வநாதன் லோகையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்வளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புருசோத்தமன், மக்கள் அதிகாரம் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கரும்பு, நெற்கதிருடன் வந்து மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்