மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த எம்.னிவாசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருமங்கலம்- மதுரை சாலை யில் வணிக வளாகம் கட்ட திருமங்கலம் நகராட்சியிடம் 2015-ல் வரைபட அனுமதி பெற் றேன். 4 மாடி கட்ட 2021-ல் அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில் 3 மாடி கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு 4 மாடி கட்டி யதாக கூறி நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.
கட்டிட வரைபடம் தொடர்பான உண்மை நகல் மற்றும் ஆன் லைன் நகலில் எத்தனை மாடிக்கு அனுமதி என்பதில் வேறுபாடுகள் இருந்தன. இதை சரி செய்யக்கோரி நகர் ஊரமைப்பு அலுவலர் வேல்முருகனிடம் தெரிவித்தேன்.
இதற்காக ஆணையருக்கு கொடுக்க வேல்முருகனிடம் ரூ.3 லட்சம் கொடுத்தேன். இப்பணத்தை பங்குபோடுவதில் இருவருக்கும் பிரச்சினை ஏற் பட்டுள்ளது.
இந்நிலையில் 17.2.2021-ல் வழங்கப்பட்ட மாற்றியமைக்கப் பட்ட கட்டிட வரைபட அனுமதியை 22.6.2021-ல் ரத்து செய்து நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நான் 2015-ல் பெற்ற கட்டிட வரைபட அனுமதி அப்படியே உள்ளது. எனவே நகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர் வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.முகமது மொய்தீன் வாதிட் டார். லஞ்ச ஒழிப்புத்துறையை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago