நாவல் பழங்கள் அதிக விளைச்சல் இருந்தும் வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.150-க்கு குறையாமல் விற்கப்படுகிறது. ஆனால், இடைத்தரகர்கள், வியாபாரிகள் கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேத னை அடைந்துள்ளனர்.
நத்தம் பகுதியில் மருத்துவக் குணமிக்க நாவல் மரங்கள் அதிகமாக உள்ளன. நாவல் பழம் இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை உடையது. அதிக சத்து மற்றும் மருத்துவக் குணம் நிரம்பியது. இந்த ஆண்டு உரிய பருவத்தில் மழை பெய்ததால், நாவல் விளைச்சல் அமோகமாக உள்ளது. நாவல் மரத்தின் கீழ் வலைகள் கட்டப்பட்டு பழங்கள் உதிர்ந்து விழுந்தாலும், மண்ணில் படாமல் சேகரிக்கப்படுகிறது. மரங் களில் உலுப்பப்படும் பழங் களையும் சேதமடையாமல் விவசா யிகள் சேகரித்து கூடைகளில் விற் பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
நத்தம் பகுதியில் விளையும் நாவல் பழங்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு வரத்து குறைவால் கிலோ ரூ.200-க்கும் அதிகமாக விற்கப் பட்டது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்தாலும் வியாபாரிகள், இடைத்தரகர்கள் கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கே கொள்முதல் செய்கின்றனர். ஆனால் சில்லறை விலையில் கிலோ ரூ.150-க்கு குறையாமல் விற்கின்றனர்.
இதனால் நாவல் பழங்களை பாடுபட்டு விளைவிக்கும் விவசாயி களுக்கு உரிய விலை கிடைக்காத சூழல் நிலவுகிறது.
தங்களுக்கு நியாயமான விலை கிடைக்க மாவட்ட நிர் வாகம், வேளாண் துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago