குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள் :

By செய்திப்பிரிவு

குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஏளூர் குமாரவேலி நகரைச் சேர்ந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏளூர் ஊராட்சி குமாரவேலி நகரில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட இடைவெளியில் பொதுக் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை. காவிரிக் குடிநீர் வழங்குவதே இல்லை.

இதனால் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக ஏளூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர் பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு போதிய குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்