நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி - தி.மலையில் விவசாயிகள் நூதன போராட்டம் : கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு கோரிக்கை முழக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி உழவர் பேரவை சார்பில் 2-வது நாளாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்மனை வழிபட்டு விவ சாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் செயல்பட்டு வந்த 71 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த ஜுலை மாதத்துடன் மூடப் பட்டுள்ளன. இதனால், செய்யாறு, வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு விலை போகிறது என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 75 கிலோ எடையுள்ள நெல் மூட்டை ரூ.850-க்கு விலை போவதாகவும், அதே நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் ரூ.1,450 வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஒரு மூட்டைக்கு ரூ.600 வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் விலை இறந்துவிட்டதாக கூறி ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2-வது நாளாக, தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதால், திருவண்ணாமலை மாவட் டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE