டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு - தினக்கூலி ரூ.350-ஆக வழங்குக : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

By செய்திப்பிரிவு

ஊராட்சிகளில் பணியாற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி யாளர்களுக்கு தினக்கூலி ரூ.350-ஆக உயர்த்தி வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தில் கே.வி.குப்பம் மற்றும் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தினக் கூலி அடிப்படையில் பணியாற் றும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் கரோனா தடுப்பு பணியாளர்கள் கூலி உயர்வு கேட்டு மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட் டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் டெங்கு கொசு ஒழிப்பு பணி களில் சுமார் 400 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு 85 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் ஆரம்பத்தில் பணியில் சேர்ந் தோம். தற்போது, ரூ.269-ஆக கூலி வழங்கப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை. எந்தவித அடையாளம், பாதுகாப்பும், சீருடையும், நிரந்தர பணியும் கிடைக்கவில்லை. தற்போது, கரோனா தடுப்புப் பணியில் இரவு, பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம். கடுமையான பணிச் சூழலில் எங்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை. இந்த வருமானத்தை நம்பித்தான் எங்களது குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே, எங்களுக்கு கூலியை உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருவண்ணமலை மாவட் டத்தில் இதே பணியை செய்யும் பணியாளர்களுக்கு தினக்கூலி யாக ரூ.326 வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் தினக் கூலியாக ரூ.350- ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என தெரிவித் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்