நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் குடியிருப்பில் வசித்துவருபவர் சுரஜ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா (25) இரண்டாவது பிரசவத்துக்காக கடந்த 30-ம் தேதி உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்துவீடு திரும்புவதற்காக, சஞ்சனாவின் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக இருந்த ஊசிக்கு மேல் பகுதியில் பயன்படுத்தப்படும் ‘வென்ஃப்ளான்’ என்னும் பொருளை செவிலியர் அகற்றியுள்ளார். அப்போது, அந்த ஊசி போன்ற பொருள் உடைந்து கையில் சிக்கியதால், சஞ்சனாவின் கையில்வீக்கம் ஏற்பட்டது. கணவர் புகார் அளித்த நிலையில் சஞ்சனா, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, மருத்துவர் தீபன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மயக்க ஊசி செலுத்தி அறுவைசிகிச்சை மூலம் ஊசி போன்ற பொருளை அரை மணி நேரத்தில் அகற்றினர். தற்போது, சஞ்சனா நலமுடன் இருப்பதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago