விவசாயி வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை இக்கரை போளுவாம்பட்டி ஏழுவாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன் (55). மனைவி ருக்மணி, மகன்கள் சுபாஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அவர்களது வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 2 பேர், சுப்ரமணியன் உள்ளிட்ட குடும்பத்தினரை கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் வைத்திருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.4 லட்சத்து 82 ஆயிரம் தொகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago