பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் எதிரெதிரே அமைந்துள்ளன. கோவை, திருப்பூர், பழநி வழித்தடங்களில் செல்லும் வெளியூர் பேருந்துகள், கோவை சாலை, பல்லடம் சாலை வழியாக இயங்கும் நகரப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. கேரளா, வால்பாறை உள்ளிட்ட வெளியூர் பேருந்துகள், ஆனைமலை, கோட்டூர் வழித்தடங்களில் இயங்கும் நகரப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.
புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிடம், இருக்கை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. வாகனங்கள் மற்றும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் காரணமாக நிற்கக்கூட இடமின்றி பயணிகள் தவிக்கின்றனர். வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்கள் தரையிலேயே அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போதுமான இருக்கை அமைத்து தரவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago