ஹோட்டல் அறையில் கேரள பெண் உடல் மீட்பு : ரத்தக் காயங்களுடன் கிடந்த நண்பருக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா (58) மற்றும் பிந்து (46) ஆகியோர் சில தினங்களுக்கு முன் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து தங்களை கணவன் மற்றும் மனைவி என்று கூறி, அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில். இருவரும் தங்கியிருந்த அறை உள்ளிருந்து நேற்று பிற்பகல் கடும் துர்நாற்றம் வெளிவந்துள்ளது. ஹோட்டல் பணியாளர்கள் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பிந்து உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். முஸ்தபா கத்தி மற்றும் மது பாட்டில்களால் கழுத்து, கை, கால்களில் குத்தப்பட்டு உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் கிடந்தார்.

தகவலின் பேரில் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காட்டூர் போலீஸார் சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முஸ்தபாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் சடலத்தையும் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பிந்துவுக்கு வினோத் என்ற கணவர் உள்ளார். சமீபத்தில் பிந்துவுக்கும், முஸ்தபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறிய இருவரும் கடந்த 26-ம் தேதி கோவை வந்து ஹோட்டலில் தங்கியுள்ளனர். முஸ்தபா உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதால், பிந்து எவ்வாறு உயிரிழந்தார் என்பதை உறுதி செய்ய இயலவில்லை. அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அங்கு எலி மருந்து பாக்கெட் கிடந்தது.

எனவே, பிந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என விசாரித்து வருகிறோம். முதற்கட்டமாக சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிந்துவை காணவில்லை என கோழிக்கோடு காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்