மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,621 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரை பொருத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,969 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,621 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.26 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 76.07 அடியானது. நீர்இருப்பு 38.15 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago