சிதம்பரத்தில் - மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

சிதம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங் கிணைப்புக் குழுவின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங் கினார். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன், கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவர் காஜா மைதீன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர்கள் ராமச்சந்திரன், கற்பனை செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாலஅறவாழி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் சங்கமேஸ்வரன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் முத்து, சலவைத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், கட்டுமான சங்கம் சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற கோரியும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்தல், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறவும், நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக பேரூராட்சிக்கு விரிவுப்படுத்த கோரி நாளை (ஆக. 9) மாலை சிதம்பரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மனித சங்கிலி போராட்டத்தை விளக்கி கீழ வீதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்