திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள், பள்ளிமைதானம் உள்ளிட்டவற்றை மேம்படுத்து வது குறித்து நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் அமைச்சர் கூறியது: இந்த பள்ளி 100 ஆண்டு களை கடந்து வந்துள்ளது.இப்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக உள்ளது. இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு துறை களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளி 100 ஆண்டு கடந்து வந்துள்ளதை முன்னிட்டு விழா நடத்தவும், தேவையற்ற கட்டிடத்தை அகற்றி விடவும், பள்ளி வகுப்பறைகள் மற்றும் மைதானத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இப்பள்ளியை புனரமைத்து கூடுதல் கட்டிடம் கட்டுவதற்குசட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளியை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும், பள்ளி வளாகத்தில் பாதுகாப்பான மழைநீர்வடிகால் அமைக்கவும், காவலர் நியமிக்கப்பட்டு பாதுகாக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
விருத்தாசலம் சார்- ஆட்சியர் அமித்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாபு, விருத் தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் சுப்ரமணியன், பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளர் தெய்வசிகாமணி, தலைமையாசிரியர் ஜெயசங்கர், வட்டாட் சியர் தமிழ்ச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago