ஆடி அமாவாசையை முன்னிட்டு பழநி கோயில், அணைப்பட்டியில் தடையை மீறி திரளானோர் வழி பட்டனர்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஆடி அமாவாசையை முன்னிட்டும் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றின் கரையில் திர ளான பக்தர்கள் முன் னோர்களுக்குத் தர்ப்பணம் செய் தனர். இதேபோல் பழநி கோயி லுக்குச் செல்லவும் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் திரண்டு வழிபாடு நடத்தினர்.
பழநி சண்முகா நதிக்கரையில் பலர் தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்க வந் தனர். ஆனால், காவல் துறை யினர் தடுப்புகள் அமைத்து ஆற் றுக்குச் செல்லவிடாமல் தடுத் ததால் திரும்பி சென்றனர்.
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் வைகை ஆற்றங்கரை யில் முன்னோருக்கு தர்ப் பணம் கொடுத்துவிட்டு, புஷ்பவ னேஸ்வரர் - சவுந்தரநாயகி அம் மன் கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இங்கு தர்ப்பணம் கொடுப்பது காசியை விட மேலானதாக கருதப்படுகிறது.இதனால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் தர்ப்பணம் கொடுப்பர். ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் தர்ப்பணம் கொடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆடி அமா வாசையையொட்டி அதிகமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தனர். ஆனால் போலீஸார் தடுப்பு அமைத்து தர்ப்பணம் கொடுக்க வந்தோர்களை திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து பக்தர்கள் புஷ்பவனேஸ்வரர் கோயில் முன்பாக விளக்கேற்றி வழி பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago