வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கடனுதவி :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கடன் வசதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடன் பெற அரசே கடன் உத்தரவாதம் அளிக்கும். தமிழ்நாட்டில் ரூ.5,990 கோடி கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனியார் தொழில் முனைவோர், வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 0452- 2530021 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்