தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் 7 போக்குவரத்து பிரிவு பணிமனைகளில் உள்ள அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஆக. 9) காலை 10 மணிக்கு தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தொடங்குகிறது.
தேர்தலை அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் துளசிதாஸ் ஆகியோர் நடத்துகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகர்புறம், தூத்துக்குடி புறநகர், விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான் குளம் ஆகிய 7 போக்குவரத்து பணிமனை களுக்கும் தேர்தல் நடத்த தனித்தனி ஆணையர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்க தேர்தலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago