ஆதிச்சநல்லூரில் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தமிழர்களின் நாகரிக தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று, கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மத்திய தொல்லியல் துறையினர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தியுள்ளனர்.

அருங்காட்சியகம் அமைப்பதற்காக ஆதிச்சநல்லூரில் பல்வேறு இடங்களை அவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார். புளியங்குளத்தில் முதுமக்கள் தாழி தகவல் மையம் அருகில் உள்ள இடங்களையும், கருங்குளம் பிரதான சாலையை ஒட்டியுள்ள பகுதிகளையும் அவர் பார்வை யிட்டார். வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்