திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இருக்கன்துறை, ராதாபுரம் பகுதிகளில் 19 கல் குவாரிகள் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இங்கிருந்து கற்கள், ஜல்லி, எம் சாண்ட் போன்றவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் கொண்டு செல்லப் படுகின்றன. பல்வேறு குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பாறைகள் உடைத்து எடுக்கப்படுவதாகவும், அனுமதி பெறாத நிலப்பரப்பிலும் பாறைகள் உடைக்கப்படுவதாகவும் அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.
மேலும், அதிக சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதால், குவாரி அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், அதிர்வுகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலை மையில், கனிமவளத் துறை துணை இயக்கு நர் குருசாமி, வருவாய்த்துறை, காவல்துறையினர் உட்பட 40-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரி கள் கூடங்குளம், இருக்கன்துறை, ராதாபுரம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நவீன முறையில் டிபிஎஸ் கருவிகள் மூலம் கல் குவாரிகளில் அளவீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “கல் குவாரிகளில் ஆய்வுப் பணி தொடர்ந்து நடை பெறும். ஏதேனும் விதி மீறல்கள், முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago