கரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும் 23-ம் தேதி காலை 6 மணி வரை வேலூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண் டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ கத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே அனுமதிக் கப்பட்டுள்ள செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வு களின்றி ஆகஸ்ட் 9-ம் தேதி (இன்று) முதல் வரும் 23-ம் தேதி காலை 6 மணி வரை பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
அதாவது, ஏற்கெனவே வழங் கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்றால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசு வழிகாட்டு நெறிமுகைளை கடுமையாக நடை முறைப்படுத்தப்படும். அதை மீறுவோர் மீது வருவாய், காவல், மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.
வழிபாடு செய்ய தடை
அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங் களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூட்டம் சேருவது தொடர்ந்தால் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறி விக்கப்படும்.அரசு உத்தரவின் பேரில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
கடைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், வாடிக்கை யாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிர்வாகம் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும், தடுப்பூசி செலுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று கண்டறி யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட் கள் வழங்கல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு கட்டாயம் அனுமதியில்லை. கரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா 3-வது அலை ஏற்படாத வகையில் அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago