ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில், ஆற்காடு, கலவை, மாம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
18 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி போடாதவர்களும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago