நாமக்கல் கோட்டத்தில் 38 தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது, என நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தபால் அலுவலகங்களில் நடைபெற்று வரும் சிறப்பு ஆதார் முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், முகவரி மாற்றம் பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதன்படி நாமக்கல் தலைமை அஞ்சலகம், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், கணேசபுரம்,நல்லிபாளையம், நாமக்கல் மாவட்ட நீதி மன்ற வளாக அஞ்சலகம், எருமப்பட்டி, மோகனூர், பரமத்தி, சேந்தமங்கலம், வையப்பமலை, செம்மேடு, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், பொத்தனூர், வேலூர் , குமாரபாளையம் உட்பட 36 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் சேவையை பெறலாம்.
புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், 5 வயது மற்றும் 15 வயது முடிந்து தங்களின் கைரேகை மற்றும் கண் கருவிழிகளை புதிதாக பதிவுசெய்பவர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. மற்ற வயதினர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தவேண்டும். திருத்தம் செய்ய வேண்டுபவர்கள் ரூ.50 செலுத்தி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
தொலைபேசி எண், மற்றும் இமெயில் திருத்தம் செய்ய துணை ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. பிற திருத்தங்களை மேற்கொள்பவர்கள் தகுந்த ஆவணங்களை கொண்டுவரவேண்டும். தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அனுகி சேவையை பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago