‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற அமைப்பின் சார்பில் குறிஞ்சிப்பாடியில் 15வது தேசிய நெல் திருவிழா நடந்தது. நிகழ்வில் பங்கேற்றோர் பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 250 விவசாயிகளுக்கு மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சடி சம்பா, சீரக சம்பா உட்பட பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி நடந்தது. கடந்தாண்டு விதை வாங்கிச் சென்று பயன்படுத்திய விவசாயி ஒருவர், ஒரு சிப்பம் விதை நெல்லை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ‘நமது நெல் காப்போம்’ அமைப்பின் தலைவர் டாக்டர் துரைசிங்கம், துணைஆட்சியர் ஜெகதீஸ்வரன், தனியார் கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் சட்டநாதன், நிர்வாகக்குழு பொருளாளர் ராமலிங்கம், வடலூர் நுகர்வோர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் கல்விராயர், வட்டாட்சியர் சையத் அபுதாகிர் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற வேளாண் புல முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago