கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மரக்கன்றுகள் : குமராட்சி ஊராட்சியில் வழங்கல்

By செய்திப்பிரிவு

குமராட்சியில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

குமராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் பொது சுகாதாரத்துதுறை மூலமாக கரோனா தடுப்பூசிமுகாம் நேற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் முகாமை தொடக்கி வைத்தார். குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் தீபனா, நர்மதா மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன், ஜீவஜோதி மற்றும் சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள் கொண்ட குழுவினர் தடுப்பூசி போட்டனர். முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கையை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்று கூறி கரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊராட்சி மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமின் 250 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்