தமிழகத்தில் கிராமங்கள்தோறும் வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நூதனப் போராட் டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தென் மண்டலப் பொறுப்பாளர்கள் கூட்டம் விருதுநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில பொதுச் செயலர் மு.வீரபாண்டியன், மாநில துணைத் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான பி.லிங் கம், தென்மண்டலச் செயலர் சுகுமாரன், மாவட்டச் செயலர் பழனிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர் அகற்றப்பட்டதை வரவேற்கிறோம். மத்திய அரசைக் கண்டித்து வரும் 23 முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தில் கிராமங்கள்தோறும் மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஜனநாயகமற்ற நாடாளுமன்றம் குறித்து மக்க ளுக்கு எடுத்துக்காட்டவே இது நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத் தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவது சட்டவிரோதமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago