நெல்லை மாவட்டத்தில் 1,188 வாக்குச் சாவடிகள் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,000 வாக்காளர்கள் வீதம் வாக்களிக்கும் வகையில், 1,188 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்கள் 3,80,107 பேரும், பெண்கள் 3,90,153 பேருமாக மொத்தம் 7,70,260 பேர் உள்ளனர். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்புடைய 769 சட்டபேரவை பாகங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு வாரியாக 1,731 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும் 6,73,986 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர் களில் ஆண்கள்- 3,30,543, பெண்கள்- 3,43,387, மூன்றாம் பாலினத்தவர்- 56 பேர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தது. தற்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு காரணமாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அதிகபட்சமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 1,000 வாக் காளர்கள் வரை வாக்களிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1,188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ராம்லால், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1,188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்