திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் - கைத்தறி கண்காட்சி, விற்பனை :

By செய்திப்பிரிவு

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தொடங்கி வைத்தார். கைத்தறி நெசவாளர் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 சதவீதம் மானியத்துடன், 8 பேருக்கு தலா ரூ. 50ஆயிரம், 2 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) கணேஷ்மார், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் கு.சங்கரேஸ்வரி, துணிநூல் கட்டுப்பாடு அலுவலர் குப்புசாமி, கைத்தறி அலுவலர் எஸ்.லெட்சுமி வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்