வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் - தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரச்சாரம் : துண்டு பிரசுரங்களை வழங்கி ஆட்சியர்கள் அறிவுரை

By செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை, மாவட்டங்களில் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கோமதி வரவேற்றுப் பேசினார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். தாய்ப்பால் வார விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற தாய் மார்களுக்கு நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ரா பாத்தில் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்ப்பால் வார விழா நேற்று நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, ‘‘குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பமாகிறது. எனவே, குழந்தை பிறந்த ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால், குழந்தைகள் புத்திக்கூர்மையும், நோயில்லாமல் ஆரோக்கியமாக வளரும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், சுகாதாரப் பணியாளர்கள், மேற் பார்வையாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், மேற்பார் வையாளர் வாசுகி நன்றி தெரி வித்தார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பின்னர் அவர், விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், புதுப்பாளையம் மற்றும் செங்கம் பகுதியில் தாய்ப்பாலின் முக்கியத் துவம் குறித்து விழிப்புணர்வு வாகனத்தில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு வண்ண கோலங்களை ஆட்சியர் பார்வை யிட்டார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்