ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள 2,648 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர் தலுக்காக இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வரும் 11-ம் தேதி வெளி யிடவுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி தயாரித்தல் தொடர்பான அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் மீது கருத்துக்கள், ஆட் சேபனைகள் தெரிவித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் 11-ம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மொத்த வாக்காளர்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 82 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயி ரத்து 63 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 34 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 178 பேர் வாக்காளர்களாக உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 127 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 288 கிராம ஊராட்சிகள், இரண்டாயிரத்து 220 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago